கீரைகளின் பயன்கள்

அகத்திக்கீரை பயன்கள் : 
  அகத்திக்கீரையை பழுப்பு நீக்கி சமைத்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்,மலச்சிக்கல் தீரும்...

முருங்கை கீரை பயன்கள் :
   முருங்கைக்கீரையை காம்பு,பழுப்பு நீக்கி சமைத்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்...

முருங்கை காய் சமைத்து சாப்பிட்டு வர விந்து அணுக்கள் அதிகரிக்கும்...

பருப்பு கீரை பயன்கள் :
  பருப்புக்கீரையை சமைத்து சாப்பிட பித்தம் தணியும்...


வெள்ளை கீரை பயன்கள் :
  வெள்ளை கீரையை சமைத்து சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பால் சுரக்கும், உடல் வலிமை அடையும்...

பசலை கீரை பயன்கள் :
  பசலை கீரையை சமைத்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்...

பால்சொரி கீரை பயன்கள் :
  பால்சொரி கீரையை சமைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும், மயக்கம் தணியும்...

முளைக்கீரை பயன்கள் :
  முளக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர நன்றாக பசி எடுக்கும்,காச நோய் குணமாகும்,காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்...

முள்ளுக்கீரை பயன்கள் :
  முள்ளுக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர மந்தம்,நீர்க்கட்டு குணமாகும்...

அரைக்கீரை பயன்கள் :
  அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர காசம் சுரம் குணமாகும், தாது விருத்தி உண்டாகும்...

சிறுகீரை பயன்கள் :
  சிறுகீரையை சமைத்து சாப்பிட்டு வர பித்தம் சாந்தியாகும்,கண்நோய் தீரும்,உடல் குளிர்ச்சி பெறும்...

புளியாரைக்கீரை பயன்கள் : 
  புளியாரைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர ரத்த மூலம்,பித்தம்,மூலவாய்வு குணமாகும்...

கோழிக்கீரை பயன்கள் :
கோழிக்கீரையை சமைத்து சாப்பிட்டு வர கிருமி,கரப்பான் தீரும்...



கருத்துகள்